ஆதி நாதா அருள்தரும் நாதா
ஆதி நாதா அருள்தரும் நாதா
குறையெல்லாம் தீர்த்திடும்
குரல் நீ நாதா
உயிரெல்லாம் உருக்கிடும்
உலை நீ நாதா
மனிதராய்ப் பிறந்தது உன்
அருள் நாதா
மனிதருள் உனைத்தொழும்
அருள் நீ நாதா
மறைபொருள் திரையிடும்
மறை நீ நாதா
உரையுனுள் உறைந்திடும்
உரை நீ நாதா
அருபொருள் உயிர்ப்பொருள் ஆயீடும்
கலை நீ
கருப்பொருள் உயிர்ப்பொருள் ஆகிடும்
கலை நீ
எப்பொளாயினும்
கரு நீ நாதா
மாந்தருள் மகத்துவம்
தாய்மை நீ நாதா
மழைத்துளியினுள் உயிரினைக்
கடத்தினாய் நீ நாதா
சூட்சம் நிலையினில் உயிரினைப்
படைத்தாய் நீ நாதா
தாய் உணவிலே மறைவிலே
கலந்தாய் நீ நாதா
வெப்பத்தில் உடலிலே உயிரினை
விதைத்தாய் நீ
தாய் மனதிலே குளிரினைத்
தந்தாய்
கருவினைக் கனிந்திட பிறந்திட
வைத்தாய் நீ
மனிதராய் உருப்பெற மகத்துவம்
புரிந்தாய்
Aathinatha Arul Tarum Naatha
Kuraiellaam Theerthidum
Kural Nee Naatha
Uyirellam Urukkidum
Ulai Nee Naatha
Manitharaai Piranthathu
Un Arul Naatha
Manitharul Unai Thozhum
Arul Nee Naatha
Maraiporul Thiraiyidum
Marai Nee Naatha
Uraiyunul Urainthidum
Urai Nee Naatha
Aruporul Uyirporul AAyidum
Kalai Nee
Karuporul Uyirporul AAyidum
Kalai Nee
Epporul AAyinum
Karu Nee Naatha
Maantharul Magathuvam
Thaaimai Nee Naatha
Mazhai Thuliyunul Uyirinai
Kadathinai Nee Naatha
Sootchama Nilaiyinil Uyirinai
Padaithaai
Thaai Unavileey Maraivileey
Kalanthaai Nee Naatha
Veppathil Udalileey Uyirinai
Vithaithaai
Thaai Manathinil Kulirinai
Thanthaai
Karuvinai Kaninthida Piranthida
Veithaai Nee
Manitharaai Urupera Magathuvam
Purinthaai