Blog

குழந்தை தன் தாயின் பாலைக் குடித்து மகிழ்கிறதோ நிறைவாகிறதோ அதைப்போல் தாயின் ஓசை இசையாக வரும்போது தாயோடு ஒன்றி உறக்கம் கொள்கிறது. ‘தால்’ என்றால் நாக்கு. நாக்கிலிருந்து வரும் ஒழுங்குப்பட்ட ஓசை குழந்தை தன்னை மறந்து உறக்கம் கொள்ளுச் செய்கிறது.

தூளிக்காகக் (ஆளை ) கயிற்றை விதாளத்தில் கட்டிக் கீழ்நோக்கித் தொங்கும் இரு முனைகளிலும் புடவையை இணைத்துக் குழந்தையை. அதில் கிடத்தி, ஆட்டிவிடும் போது குழந்தை உறங்கப் பாட்டுப்பாடுவதையே தமிழில் ‘தாலாட்டு’ என்பர்.

என் முதல் மகன் கதிரவனை அவ்வாறு உறங்கச் செய்யும் போது என் மனைவியிடம் ஏதேனும் ஒரு தாலாட்டு பாடு என்றேன். தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னார்கள்

உடனே அமர்ந்து ‘சங்குக் கழுத்தழகு என் செண்பகமே கண்ணுறங்கு என்று தொடங்கிப் பாட்டு ஒன்று எழுதினேன்.  பிள்ளையை விரைந்து  என் மனைவி பெற்று விட வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் எதிர்பார்க்காத சூழலில் என் மனைவி கருவுற்று ஆண்மகவு ஒன்றினை உரிய காலத்தில் பெற்றெடுத்தாள். என் திருமணம் தமிழ்த் திருமணமே. என்னுள் ஒன்றியிருந்த பேரறிஞர்  அண்ணா, பெரியார் அவர்கள் சிந்தனைகளோடு மலர்ந்ததே இந்தப்பாடல் என்பதே உண்மை. அவனும் (மகன்) கடந்த நாற்பதாண்டுகளில் ஓர் ஓப்பற்ற நிறுவனத்தில் உயர்ந்த பீடத்தில் அமர்ந்து சிறக்கிறான். அவனுக்காக எழுதினேன். அவனும் செயல் மறவராக மட்டுமின்றி எழுத்து வேந்தராகவும் திகழ்கிறான். நெஞ்சம் இனிக்கிறது. பாட்டுக்குக் ‘கரு’ பொருள் அவனே. நாளை பாடல் பெற்ற தளமாவான் நிச்சயம்.

இந்தத்தாலாட்டுப் பாட்டினைத் தன் தம்பி புதியவன் மனைவி கருவுற்றிருந்த முதிர்வில் எங்கள் இதயத்தை ஈர்த்த, யாழிசை போல் இனிக்கும் குரல் செல்வி பிரியங்காவை வைந்துப் பாட வைத்திருப்பது தேர்த் திருவிழாவில் மங்கல இசையைக் கேட்பது மனம் மகிழ்கிறது.

Leave a Reply