Sangu Kazhuthazagu

Sangu Kazhuthazagu

Album Name: LaaLaatu
Song Name: Sangu Kazhuthazagu
Singer: Priyanka NK (Super Singer)
Music Composer : Jim Prince & Dr.P.Udayakumar
Lyrics: Dr.P.Udayakumar

Lyrics

சங்குக் கழுத்தழகு - என்
செண்பகமே கண்ணுறங்கு
தங்கஒளிப் பல்லழகு - என்
தாமரையே கண்ணுறங்கு
சிங்காரப் பேச்சழகு - என்
செந்தமிழே கண்ணுறங்கு
கொங்குமலர்க் கண்ணழகு - என்
கோமளமே கண்ணுறங்கு

(சங்கு)

காவடிகள் தூக்கவில்ல-நீ
கண்தேடி வந்த இம
தவமேதும் செய்யவில்ல - நீ
தானாக வந்த நிலா
கோயில் குளம் சுத்தவில்ல - நீ
கோயில் தேடி வந்த கிளி
காயகல்பம் தின்னதில்ல - நீ
காலத்தில வெளஞ்ச நெல்லு

(சங்கு)

மாடப்புறா உன்ன வெச்சி
மணிக்கோட்ட கட்டிருக்கேன்
காடெல்லாம் நாடாக்கி
கழனிகள நீ திருத்து
வீடெல்லாம் நெல்குவிய
வீதியெல்லாம் பூ மணக்க
வாடிய மக்களெல்லாம்
வாயார வாழ்த்திவிட

(சங்கு)

அத்தை மவ ரத்தினத்த
அழகா நீ கைப்புடிச்சு
நித்திலமே காலமெல்லாம்
நிம்மதியா வாழோணும்
நத்தைமவ முத்தை ஒன்னு
நாலாறு திங்களிலே
நிச்சயமாத் தரவோணும் - நீ
நிச்சயமாத் தரவோணும்

(சங்கு)

Sangu kazuthazagu - Yen
Shenbagame kannurangu
Thangaoli palalazagu - Yen
Thamaraiye kannurangu
Singara pechalazagu - Yen
Senthamizhe kannurangu
Kongumalar kannalazagu - Yen
Komalame kannurangu

(Sangu)

Kavadigal thokkavila - Nee
Kanthedi vantha ima
Thavamethum seiyavila - Nee
Thanaga vantha nila
Kovil kulam suthavila - Nee
Kovil thedi vantha kili
Kayakalpam thinnathila - Nee
Kalathil velanja nellu

(Sangu)

Madapura unna vechi
Manikotta kattiyiruken
Kadellam nadakki
Kalanikala nee thiruthu
Vedellam nelkuviya
Vethiyellam poo Manakka
Vadiya makkalyellam
Vayara vazhthi

(Sangu)

Athai mava rathinatha
Alazha nee kaipudichi
Nithilame kalamellam
Nimmathiye vazhonum
Nathaimava mugathai onnu
Nalaru Thingalile
Nichayamath tharavonum - Nee
Nichayamath tharavonum.

(Sangu)

Email
info@arrivanisai.com
instagram
instagram
instagram
instagram
instagram
instagram